ஜீவனுள்ள கல்லே – Jeevanulla Kallae

ஜீவனுள்ள கல்லே – Jeevanulla Kallae

தள்ளப்பட்டதாயினும், தெரிந்துகொள்ளப்பட்டதும்,
விலையேறப்பெற்றதுமான ஜீவனுள்ள கல்லே -(2)
ஜீவ கற்களைப் போல், மாளிகையாய்க் கட்டினீர்,
பலிகளை செலுத்திடவே, எம்மை ஆசாரியனாய் மாற்றினீர்;

என்னை நிரப்புமே, என்னை நிரப்புமே,
உம் வல்லமையால் என்னை நிரப்புமே;
என்னை நிரப்புமே, என்னை நிரப்புமே,
உம் மகிமையால் தினம் மூடுமே.

1) சமுத்திரம் ஜலத்தினால், நிறைந்து இருப்பது போல்,
பூமி உம் மகிமையை, அறிந்திட செய்திடுமே -(2)
அற்புத அடையாளங்கள், கரங்களால் செய்திடுமே,
ஆயிரம் ஆயிரங்கள், உம் அண்டை சேர்த்திடுமே.
…… (என்னை)

2) இரட்சிப்பின் கொடி பறக்க, இயேசு நாமம் உயர,
தேசம் உம்மை அறிய, நேசர் அன்பில் மகிழ -(5)
புண்ணியங்கள் அறிவித்திட, நீர் எங்களை தெரிந்தெடுத்தீர்,
உலகம் தோன்றுமுன்னே, எங்களை முன்குறித்தீர்.
…… (என்னை)