
உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam
உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே பாடுவேன் -2
என் உயிரே என் உறவே
நீர் தானே என் ஏசய்யா -2
கண்ணீரை துடைத்து
காயங்கள் ஆற்றி
கனிவோடு என்னை
நீர் அணைத்தீரய்யா
நிந்தனை நீக்கி
அவமானம் மாற்றி உம்
மகிமையால் முடிசூட்டி
மகிழ்ந்தீரய்யா
தனிமையில் கிடந்தேன்
தள்ளாடி நடந்தேன்
தயவோடு எந்தன் கரம்
பிடித்தீரய்யா