இன்று நமக்காக இயேசு பிறந்தாரே
மண் மாந்தரின் பாவம் போக்க
இம்மானுவேல் பிறந்தாரே
மகிழ் பாடி கொண்டாடுவோம்
அழகு மிகுந்தவர் இம்மானுவேல்
அன்பு மிகுந்தவர் இம்மானுவேல்
ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய்
உன்னத தேவன் வந்துதித்தார்
ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல்
வல்லமை உள்ளவர் இம்மானுவேல்
நித்திய பிதா சமாதான பிரபு
நீதியின் தேவன் வந்துதித்தார்
தாவீதின் மைந்தர் இம்மானுவேல்
தாழ்மை உள்ளவர் இம்மானுவேல்
அன்பின் தேவனாம் இயேசு பாலகன்
பாவங்கள் போக்க வந்துதித்தார்