தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae

Deal Score0
Deal Score0

தாவீதின் நகரத்திலே பெத்தலகேம் ஊரினிலே
சத்திரத்தை தேடி அலைந்தாரே – யோசேப்பு
மரியாளின் பேறு வலி உணர்ந்தாரே

1. அங்கும் இங்கும் தேடி அலைந்தும்
ஓரிடமும் கிடைக்கவில்லை
வழியிலே இயேசு பிறந்தாரே – முன்னணையின்
புல்லணையில் தான் தவழ்ந்தாரே

2. ஆட்டிடையர் ஆடுகளை
நள்ளிரவில் காத்திருக்க
வானில் தூதர் தோன்றி துதித்தாரே – தேவன்
மானிடனாய் பிறந்தார் என்றாரே

3. ஞானிகளும் நட்சத்திரத்தை
பின்தொடர்ந்தே வீட்டையடைந்து
பாலனை கண்டு பணிந்தாரே – பரிசாய்
காணிக்கை தந்து மகிழ்ந்தாரே

4. பாடல் கேட்கும் அன்பரே
பாசமுள்ள நண்பரே
இயேசுவுக்கு இடம் தருவீரா – உங்க
உள்ளத்தில் மீட்பினை பெற்றிடுவீரா
காலமும் சமீபமாகுதே – இந்த
தருணத்தை விட்டிடாமல் முடிவெடுப்பீரா

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo