உங்க கூட பேசணும் இயேசப்பா – Unga Kooda Peasanum Yeasappa

உங்க கூட பேசணும் இயேசப்பா – Unga Kooda Peasanum Yeasappa

உங்க கூட பேசணும் இயேசப்பா
உங்க கூட பேசணும் இயேசப்பா
அன்பாக நீர் கூறும் வார்த்தைகள் எல்லாம்
என் வாழ்வை அழகாக மாற்றிடுமே

1.ஆயிரம் சொந்தங்கள் என்னோடு இருந்தாலும்
அமைதியை தருபவர் நீரல்லவா…(2)

உந்தன் முகஅழகினை நான்தினம் கண்டாலே
கவலை என்னில் மறைந்து ஓடுதே

ஆசையாய் உன்குரலை நான்கேட்க வேண்டும்
உம்மையே நாடிதேடி ஓடி வரவேண்டும்

எங்க கூட பேசணும் அப்பா…நீங்க (2)

2.கண்ணீர் கவலையால் நான் தடுமாறும்போது
காத்திடும் கரம் தருபவர் நீரல்லவா

உந்தன் இறைஇரக்கத்தை என்விழி கண்டாலே
கருணை என்னில் நிறைந்து ஓடுதே

ஆசையாய் உம் தரிசனம் நான்தேட வேண்டும்
அளவில்லா உம்அன்பை நான் பகிர வேண்டும
எங்க கூட பேசணும் அப்பா…நீங்க (2)