இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo

Deal Score+1
Deal Score+1

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. ­ இயேசுவின் அன்பை

1. அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2
கல்வாரி மலைக் கண்ணீர்
சொல்லிடும் அன்பு

2. அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு ­- 2
சிலை என பிரமையில் நிறுத்திடும் அன்பு… ­

3. எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு ­

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo