மகிமையானவர் உயர்த்திருப்பவர்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
உம் நாமமே அதிசயம்
என்றும் மாறா சர்வ வல்லவரே
உம் நாமமே உயர்ந்ததே
என்றென்றுமே ஆராதிக்கிறோம்
என் இயேசுவே
தாயினும் மேலாய் அன்பு வைத்தீர்
கருவினில் இருந்த போது
தெரிந்து கொண்டீர்
வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர்
என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர்
ஆதியும் அந்தமும் அற்றவர் நீர்
சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர்
என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் – உம் நாமமே.