என் நேசம் என் இயேசு – En Nesam En yesu

Deal Score+1
Deal Score+1

என் நேசம் என் இயேசு – En Nesam En yesu

என் நேசம் என் இயேசு
என் பாடல் புதியது(2)
என் வாழ்க்கையெல்லாம் என் நேசருக்காய்-அவர் வார்த்தையில்தான்
என் ஜீவன் (2)

என் நேசம் என் இயேசு
என் பாடல் புதியது

1. உலக வாழ்வென்னும் பயணத்தில் -நான் உலண்டு துவண்ட போது(2)
உன் வசனம் வழிக்குத் துணையாய் ஜீவன் தந்தென்னை நடத்தும் தயவாய் (2)
-என் நேசம்…(2)

2.புதிய வாழ்வொன்றை நீர் தந்தாய் என்னை புனிதமாய் மாற்ற (2)
புது ராகம் பாடி மகிழ்வேன்- நீர் தந்த வாழ்வைநான் பகிர்வேன்(2)
-என் நேசம்…(2)

3.எந்தன் நேசரே உன் வருகைக்காய் விழி வழியில் நோக்கிப் பார்ப்பேன் (2)
அந்த நாளில் உலகம் மகிழும் -உம் அழைப்பின் அரசில் நான் இணைவேன்(2)

என் நேசம் என் இயேசு
என் பாடல் புதியது
என் நேசம் என் இயேச
என் பாடல் புதியது
என் வாழ்க்கை எல்லாம்
என் நேசருக்காய்
அவர் வார்த்தையில்தான் என் ஜீவன்
என் வாழ்க்கையெல்லாம் என் நேசருக்காய்
அவர் வார்த்தையில்தான் என் ஜீவன்

என் நேசம் என் இயேசு என் பாடல் புதியது

Jeba
      Tamil Christians songs book
      Logo