Vazhi Kaattum Aaviyae Vaarum song lyrics – வழிகாட்டும் ஆவியே வாரும்

Deal Score0
Deal Score0

Vazhi Kaattum Aaviyae Vaarum song lyrics – வழிகாட்டும் ஆவியே வாரும்

வழிகாட்டும் ஆவியே வாரும் – எம்மை
வழிநடத்தி வாழ்விக்க வாரும்
வாருமய்யா இறை ஆவியாரே
வாழ்விக்கும் எங்கள் துணையாளரே

அன்பினைப் பொழிந்து அபிசேகம் செய்து
அருட்கொடையால் எம்மை நிரப்பனுமே
எம் வினை தீர்க்க ஜீவனைத் தந்து
இயேசுவிடம் எம்மை சேர்க்கனுமே

பாவங்கள் போக்கி பயமதை நீக்கி
திடப்படுத்தி எம்மை நடத்தனுமே
மாய உலகத்தின் மயக்கத்தில் இருந்து
தெளிவூட்டி கரை சேர்க்கனுமே

உள்மனக் காயம் மந்திர மாயம்
யாவையும் போக்கி தாருமய்யா
சொல்லும் செயலும் வெல்லும் வகையாய்
வரம் தந்து எம்மை உயர்த்துமய்யா

தூய ஆவியானவர் பாடல் Tamil Holy Spirit Song

Jeba
      Tamil Christians songs book
      Logo