Vaiyaththin Paavam pokka song lyrics – வையத்தின் பாவம் போக்க
Vaiyaththin Paavam pokka song lyrics – வையத்தின் பாவம் போக்க
வையத்தின் பாவம் போக்க
வந்தாயே எம்மைக் காக்க
எந்நன்றி சொல்வேன் நான் இறைவா
உன்னைப் போல் அன்பு செய்ய வரம் தா
யார் என்று பாராமல் ஏனென்று கேளாமல்
யாவர்க்கும் குணம் அளித்தாய்
ஏற்றங்கள் இல்லாத ஏக்கங்கள் சொல்லாத
ஏழைக்கும் வாழ்வளித்தாய்
எளியவர் கண்ணீர் காணாமல்
ஏதோ கனவில் மிதக்கின்றோம்
அழுகுரல் ஏதும் கேளாமல்
ஏதோ பேசிச் சிரிக்கின்றோம்
பிறந்து வா இறைவா- என்னில்
மனிதம் மலர்ந்திட வா
நேசித்த மழலையரை பாசத்தோடு வரவேற்று
ஆசி நீ அளித்தாய்
ஆதரவில்லா எளியவர்க்கு நீதி மறுத்த மனிதர்களை
அறவே நீ வெறுத்தாய்
காமத் தீயின் கோரங்கள்
அணையும் மழலைத் தீபங்கள்
நீதியின் கண்களில் பேதங்கள்
ஏழை மனங்களின் தாபங்கள்
பிறந்து வா இறைவா- என்னில்
மனிதம் மலர்ந்திட வா