உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae

Deal Score0
Deal Score0

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae

வாழ்தொலி கீதம் விண்ணில் முழங்கவே தேவமைந்தனும் உயிர்த்தெழுந்தார்
தேவ மைந்தனும் உயிர்த்தெழுந்தார்

உயிர்த்தெழுந்தார் இறைமகனே
உன்னத கீதம் நாம் பாடுவோம்
மாந்தரே மகிழ்ந்திடு
உயிர்த்த இயேசுவை போற்றிடு
மரணத்தை வென்றவர்
மகிழ் நிறை தூயவர்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

மண்ணில் மூழ்கிடும் உயிர்களெல்லாம் தேகம் முழுவதும் அழித்திடுமே
மண்ணில் மூழ்கிடும் விதைகளெல்லாம் உயிரின் மரங்களாய் விளைந்திடுமே
வானினின்று வந்த இறைமொழியே
விருட்சம் தந்த உயிர் கனியமுதே
மூன்றொரு நாளினில் எழுந்தது ஆலயம்
உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்

பாவ சின்னமாம் சிலுவையுமே புனிதமானது இறைமகனால்
ஆதி பாவங்கள் நீங்கியதே
தன்னை தந்த உயிர் தியாகத்தினால்
நம்மை மீட்கவே செம்மறியாய்
கல்வாரி பயணத்தை தாங்கியவர்
மகிமையின் நாயகன் உயிர்த்த நன்னாளிது
அல்லேலூயா இயேசு உயிர்த்தெழுந்தார்

Uyirthelunthaar Iraimaganae easter song lyrics in english

Uyirthelunthaar Iraimaganae

    godsmedias
        Tamil Christians songs book
        Logo