Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட

Deal Score0
Deal Score0

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட

உம்மோடுதான் வாழ்ந்திட ஆசையே
உங்க வார்த்தைதான் என் வாழ்வின் சுவாசமே

என் கறையான வாழ்வை கழுவி
வெண்பனி போல் உள்ளத்தை மாற்றி
என் குறையை நிறையுள்ளதாக்கி
என் கரத்த பிடித்து என்னை நடத்தினீர்
மேல் உயர உயர என்னை உயர்த்தினீர்

நீர் போதும் இயேசுவே
நீர் வேண்டும் இயேசுவே
என் பாச நேசமே
என் ஜீவ சுவாசமே

1.Verse

உம் நேசத்தால் என் உள்ளம் வழியுதே
உலக யோசனை என்னை விட்டு விலகுதே
விசுவாசத்தால் நீதிமானாகிறேன் -உம்
கிருபையால் மறுரூபமாகிறேன்

-என் கறையான வாழ்வை

2.Verse
உம் கரங்களே என்னைப்பற்றி நடத்துமே
உம் வரங்களே என்னை நிரப்பி எழுப்புமே
உம் வார்த்தையே இவ்வுலகை ஜெயிக்குமே
என் ஜீவனே உமக்கென்றே வாழுமே
-என் கறையான வாழ்வை

Jeba
      Tamil Christians songs book
      Logo