Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே
பல்லவி அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! சரணங்கள் 1. மதி-மங்கின எங்களுக்கும்,திதி-சிங்கினர் தங்களுக்கும்உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல 2. முடி-மன்னர்கள் மேடையும்,மிகு-உன்னத வீடதையும் நீங்கிமாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,வந்தனையோ தரையில்? — அதி-மங்கல 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல
Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே Read More »