Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ

அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kaanamaliruppomo

அரசனைக் காணமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத – அரசனை

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத – அரசனை

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத – அரசனை

4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத – அரசனை

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத – அரசனை


Arasanai Kaanamaliruppomo? Namathu
Aayulai Veenaaga Kazhippomo

Paramparai Gnanaththai Pazhippomo Yuthar
Paadanu Pavangalai Ozhippomo – Yutha

1.Yaahkobilor Velli Uthikkumentrae Israel
Raaja Sengolengum Kathikkumentrae
Aakkamilanthu Maruvaakkuraiththa Paalaam
Theerkkan Mozhi Poiyaatha Baakkiyamae – Yutha

2.Deaso Mayaththaaragai Thontruthu Paar Mearkku
Thisai Vazhi Kaatti Mun Selluthu Paar
Poosanai Kaana Nankodaikal Kondae Avar
Ponnadi Vananguvom Nadauvmintrae – Yutha

3.Alangaaramanai Ontru Thonuthu Paar Athan
Alagu Manamum Kannum Kavarnthathu Paar
Elavara Sankirkkum Nitchayam Paar Naam
Eduththa Karumam Siththiyaakidum – Yutha

4.Aramanaiyil Avarai Kaanomae Athai
Agantru Thenmaarkkmaai Thirumbuvamae
Maraintha Udu Atho Paar Thirumbinathae Bethleam
Vaasalail Namai Kondu Searkkuthu Paar – Yutha

5.Pon Thoobavarkkam Vellai Pollamittae Raayar
Porkazhal Archanai Purivomae
Van Kannan Yearothai Paaraamal Deva
Vaakkinaal thirumbinom Soraamal – Yutha

 

11.அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

And God said, Let the earth bring forth grass, the herb yielding seed, and the fruit tree yielding fruit after his kind, whose seed is in itself, upon the earth: and it was so.

ஆதியாகமம் | Genesis: 1

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version