Saranam Nambinean – சரணம் நம்பினேன்

சரணம் நம்பினேன் – Saranam Nambinean

பல்லவி

சரணம் நம்பினேன் யேசு நாதா-இது

அனுபல்லவி

தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. – சரணம்

சரணங்கள்

1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து,
முன் னாள் வினையைத் துறந்து,-ஆதி
மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. – சரணம்

2. சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே,
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. – சரணம்

3. அலைவாய்த் துரும்புபோல் ஆடி,-உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்,
தொலையாத வாழ்வை மன்றாடி,-அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி. – சரணம்

4. இனிய கருணை பொழிவேதா,-எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா,
கனி வினை நீக்கிய நீதா,-நசரைக்
கர்த்தாதி கர்த்தா, உன் கருணையைத் தா, தா. – சரணம்


Saranam Nambinean Yeasu Naathaa Ithu

Tharunam Tharunam Untran Karunai Koor Vedha – Saranam

1.Nin Arulaal Ingae Vanthu Entrum
Nin Adaikkalamaaga Ennaiyae Thanthu
Munnaal Vinaiyai Thuranthu Aathi
Moolamae Una Kolam Ratchiyum Entru

2.Sannathi Mun Thondan Nintrae Entrum
Thaayaana Karunai Unakku Undentrae
Sennimeal Karam Thookki Nintrae Unai
Seavikkum Eliyonai Kobikkaai Entrae

3.Alaivaai Thurumbu Poal Aadi Una
Thathi Karunai Vara Sempaatham Theadi
Tholaiyaatha Vaazhvai Mantrradi Anbin
Thothra Sangeerththana Geethangal Paadi

4.Iniya Karunai Pozhiveadha Enai
Iru Karaththaal Anai En Kiristhu Naatha
Kani Vinai Neekkiya Neethaa Nasarai
Karththathi Karththaa Un Karunaiyai Thaa Thaa

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version