Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில்

வந்தருள் இவ்வாலயத்தில் – Vantharul Ivvaalayaththil


1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனை
வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!
அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,
ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா!

2. திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து,
தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே!
பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க
உருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றும்.

3. சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்
தமியர் தமக் காறுதலாய்த் தயை செய், ஆதிசேயா!
செஞ் சொல் மலிந்த புலவர், செப்பு தமிழ்க் குகந்த உன்றன்
சீரடிக்கண் சேர்பவர்க்கே, ஆருயிர் உண்டாவதற்கே.

4. பூவுலகை ஆளும் மன்னர், போதம் உணர் வேதியர் உன்
பொற் பதத்தை அர்ச்சிக்கவே நற் பதம் தா, தேவே!
மூவுலகிலும் துதியும், முக்யம் மகத்துவம் கனமும்,
மா பலமுமே உமக்கே, மங்களம் உண்டாவதாக.


1.Vantharul Ivvaalayaththil Magimai Yeahovavae Unai
Vaalththum Adiyaarkku Nitham Vaaiththa Pearu Vaalvae
Anthi Pagal Engunai Vanthadaiyum Adiyaarkku Irangi
Aatharavaai Aandu kolvaai Aathi Paraaparan Kumaaraa

2.Thiru Karunai Mozhiyaal Mana Thirukarukkum Poruttealunthu
Theeya Vinai Mathi Thazhippaai Devar Pearumaanae
Pearukkamula Un Vasanam Peathaiyarukkae Palikka
Urukkamudan Erangum Aiyya Un Pathamae Thanjam Entrum

3.Sanjalam Minjum Manthaal Saranam Unakentrum Varum
Thamiyar Thama Kaaruthalaai Thayai Sei Aathiseayaa
Senj Sol Malintha Pulavar Seppu Tamil Kukantha Untran
Seeradikkan Searppavarkkae Aaruyir Undaavatharkkae

4.Poouvlagai Aalum Mannar Potham Unar Veathiyar Un
Por Pathathai Archikkavae Nar Patham Tha Deve
Moouvlagilum Thuthiyum Mukyam Magaththuvam Gnamamum
Maa Palamumae Umakkae Mangalam Undavathaaga

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version