காரிருள் பாவம் இன்றியே – Kaarirul Paavam Intriyae
1.காரிருள் பாவம் இன்றியே
பகலோனாக ஸ்வாமிதாம்
பிரகாசம் வீசும் நாட்டிற்கே
ஒன்றான வழி கிறிஸ்துதாம்
2.ஒன்றான திவ்விய சத்தியத்தை
நம் மீட்பர் வந்து போதித்தார்
பக்தர்க்கொன்றான ஜீவனை
தம் ரத்தத்தால் சம்பாதித்தார்
3.முற்காலம் தூயோன் பிலிப்பு
காணாததை நாம் உணர்ந்தோம்
கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டு
மேலான ஞானம் அடைந்தோம்
4.நற்செய்கையில் நிலைப்போருக்கே
வாடாத கீரிடம் என்றுதான்
விஸ்வாசிகள் கைக்கொள்ளவே
யாக்கோபு பக்தன் கூறினான்
5.மெய் வழி சத்தியம் ஜீவனும்
மாந்தர்க்காய் ஆன இயேசுவே
பிதாவின் முகம் நாங்களும்
கண்டென்றும் வாழச் செய்யுமே
1.Kaarirul Paavam Intriyae
Pagalonaaga Svaamithaam
Pirakaasam Veesum Naattirkae
Ontraana Vazhi Kirsthuthaam
2.Ontraana Dhivviya Saththiyaththai
Nam Meetpar Vanthu Pothiththaar
Baktharkontraana Jeevanai
Tham Raththathaal Sambaathiththaar
3.Murkaalam Thuyoan Pilippu
Kaanathathai Naam Unarnthom
Kiristhuvil Swamiyai Kandu
Mealaana Gnaanam Adainthom
4.Narseigaiyil Nilai Porukkae
Vaadaatha Kreedam Entru Thaan
Viswaasikal Kaikollavae
Yakkobu Bakthan Koorinaan
5.Mei Vazhi Saththiyam Jeevanum
Maantharkkaai Aana Yeasuvae
Pithaavin Mugam Naangalum
Kantrentum Vaazha Seiyumae