Appa Arutkadalae Varam – அப்பா அருட்கடலே வரம்

பல்லவி

அப்பா, அருட்கடலே, வரம்
துப்பாய் இவர்க்கருள்வாய்!

அனுபல்லவி

செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும்
சென்றறிவித்திட நிறைவாய். – அப்பா

சரணங்கள்

1. பண்டு புறாவுருகொண்டு இறங்கிய
பான்மை இவர் சிரமீதே,-திருத்
தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி
சூட்ட இரங்கும் இப்போதே. – அப்பா

2. நன்னயமாகவே பன்னிரு வேதியர்
நாவில் எழுந்துரை யாடிப்,-பேயின்
சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர்
தம்மிலும் வந்தசை வாடி. – அப்பா

3. இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர்
ஏவைக் குலங்கள் ஈடேறப்,-பெருந்
துன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச்
சொல்லு முந்நூலினில் தேற. – அப்பா

4. தேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும்
தீயவை அப்புறம் ஏகத்,-திரி
யேகருக் கர்ப்பிகமாக ஒப்பிக்கும் நல்
எண்ணம் இவர்க்குள் உண்டாக. – அப்பா

5. முந்து நடுவு முடிவுமிலா ஒரு
மூவரில் அக்கினிக் கொழுந்தே,-தேவ
சிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச்
செய்வதற் கிங்கனம் எழுந்தே. – அப்பா

9.பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

And God said, Let the waters under the heaven be gathered together unto one place, and let the dry land appear: and it was so.

ஆதியாகமம் | Genesis: 1

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version