அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் – Anbarin Nesam Aar Sollalaagum
பல்லவி
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
அனுபல்லவி
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய
சரணங்கள்
1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,
எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய
2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய
3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய
4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய
5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மொத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே. – அதிசய
Anbarin Nesam Aar Sollalaagum – Athisaya
Anbarin Nesam Aar Sollalaagum
Thunba Akoram Thodarnthidum Nearam
1.Ithuven Sareeram Ithuventran Raththam
Enai Ninaiththidum Padi Arunthumentraarae
2.Pirinthidum Vealai Nerunginathaalae
Varunthina Sheesharkaai Maruki Nintraarae
3.Viyaalaniravinil Viyaakulaththodae
Vilambina Pothagam Maranthidalaamo
4.Seadiyum Kodiyum Poal Searnthu Thammodae
Mudiuv Pariyantham Nilaippeer Entrarae
5.BaktharKatkaai Paramanai Nokki
Moththavum Ookkamaai Vendikondaarae