Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே

பல்லவி

அருட்கடலே, வரந் தர இது சமயமே;
ஐயனே, அருள் தாரும்.

சரணங்கள்

1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,
கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட்

2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட்

3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச,
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட்

4. திரியேக தேவா, திருச்சபை பெருக,
அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட்

5. அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,
சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. – அருட்

12.பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.

And the earth brought forth grass, and herb yielding seed after his kind, and the tree yielding fruit, whose seed was in itself, after his kind: and God saw that it was good.

ஆதியாகமம் | Genesis: 1

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version