என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை – 2
உன்னைக் கைவிடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை – 2
மனிதர் மறந்து போனாலும்
வன் பகையாய் உன்னை பகைத்தாலும்
உறவுகள் வெறுத்து தள்ளினாலும்
வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும்
தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும்
வியாதியால் சரீரம் வாடினாலும்
மரணமே அருகில் நெருங்கினாலும்
உம்மாலே நான் மறக்கப்படுவதில்லை
உம் வார்த்தை மாறுவதே இல்லை
என்னை கைவிடுவதில்லை
என்னை விட்டு விலகுவதில்லை
என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai