சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

Deal Score+3
Deal Score+3

சிலுவையோர் புனிதச் சின்னம்
ஜெகத்து ரட்சகன்
இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை

1.கல்வாரியில் முளைத்து ககனம்
வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்து
இகபரத்தை இணைத்து
இல்லாரைச் செல்வராக்கும்
பொல்லாரை நல்லோராக்கும்
நல்லாயன் இயேசு சுவாமி
தோளில் சுமந்து சென்ற

2.அலகை சிரமுடைக்க
அகந்தை நினைவழிக்க
பலமயல்களகற்றப் பவக்
கடலைக் கடக்க
உலகில் உயிர்களோங்க
உன்னத வாழ்வு பெற
பலகுல மனிதரும் பகைத்துப்பின்
போற்றுகின்ற!

3.யூதர்க்கிடறலான
இயேசு நாதர் சிலுவை
கிரேக்க ஞானியருக்கு
பைத்தியமச் சிலுவை
அன்பர்க் கடைக்கலமும்
தேவ பெலனும் சிலுவை!
தன்னை உணர்ந்தவர் தம்
தனிப்பெருமை சிலுவை – சிலுவை

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo