
Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு
Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு
நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
காத்து நடத்திடுவார்
கலங்காதே திகையாதே
கர்த்தர் இயேசு உண்டு
1.உன்னதங்களிலே வாசம் செய்யும்
உன்னதமான தேவன் உண்டு
உந்தன் கவலையை அவரிடம் சொன்னால்
உடனே பதிலளிப்பார்-உனக்கு
2.பாரினில் உழலும் பாவியாம் உனக்கு
பரிந்து பேசும் இயேசு உண்டு
பரன் பாதம் தேடியே வந்தால்
பரிவாய் பதிலளிப்பார்
3.அன்பாக உன்னை நன்றாக நடத்தும்
இன்ப தேவ ஆவி உண்டு
துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்
கனிவாய் பதிலளிப்பார்
4.வானமும் பூமியும் நிலைமாறினாலும்
என்றும் மாறா வார்த்தை உண்டு
அதிகாலையில் அவர் முகம் கண்டால்
அன்பாய் பதிலளிப்பார்
- Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்