Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய்
Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய்
நான் விரும்புவதை காணிக்கையாய்
தருகின்றேன் இறைவா
நீ விரும்புவதை தருவதன்றோ
காணிக்கையே தலைவா
தந்ததெல்லாம் நீ தானே
பெற்றதெல்லாம் நான் தானே
என் சிந்தனை சொல் செயல் அனைத்தையுமே
உந்தன் விருப்பம்போல் மாற்றிவிட்டேன்
இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா
வானமும் பூமியும் உந்தன் விருப்பம்போல் தருகிறதே
உயிர் தரும் பயிர்களும் பன்மடங்காய் பலன் தருகிறதே
அதுபோல் நானும் பலன் தரவே
என்னையே காணிக்கை ஆக்குகின்றேன்
இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா
அன்பும் அறனும் தன்னே தருகின்ற பலிகளன்றோ
மறுமையும் மகிமையும் அதனால் வருகின்ற பலன்களன்றோ
எனவே நானும் பலன் தரவே
என்னையே காணிக்கை ஆக்கிடுவேன்
இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா
நான் விரும்புவதை காணிக்கை பாடல் Kaanikai Padal