Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே
அன்பு அன்பு தேவனின் அன்பு | Mazhai Oyntha
மழை ஓய்ந்த பின்னே வானவில் அன்பு
இஸ்ரவேல் மக்களை காத்ததும் அன்பு
இரவினில் அக்னி ஸ்தம்பமும் அன்பு
செங்கடலின் நடுவினில் பிளந்ததும் அன்பு
மாராவின் கசப்பை மாற்றியே தருவார்
வானத்தை திறந்தே மன்னாவும் தருவார்
தாகத்தில் கன்மலை ஊற்றாக பெருகும்
தன்னிகரே இல்லா
தெவிட்டாத அன்பு
அன்பு அன்பு தேவனின் அன்பு
எங்கும் நிறைந்திடும் உன்னத அன்பு
அன்பு அன்பு தேவனின் அன்பு
என்றும் நடத்திடும் நேசரின் அன்பு
2இருவிழிகள் காணும் காட்சிகள் அன்பு
காணாததிலுமே தேவனின் அன்பு
இருசிறகில் பட்டாம்பூச்சிக்கும் அன்பு
சோலையில் மரங்கள் பறவைக்கும் அன்பு
தேவைகள் நிறைந்த உயிர்களினுள்ளும்
தேவனின் நிறைவை உணர்வதும் அன்பு
தேவைகள் அறிந்து இரங்கும் குணமே,
இறைவன் தான் வாழ்ந்திடும் உள்ளத்தின் அன்பு
– அன்பு அன்பு தேவனின் அன்பு
3தாழ்மையின் உருவாய் வந்தாரே இயேசு
ஏழ்மையின் சுமையை சுமந்தாரே, அன்பு
நிந்தைகள் பலவும் அடைந்தாரே தேவன்
மனதார பொறுமை காத்தாரே, அன்பு
சிலுவை சுமந்து தடுமாறி விழுந்து,
உனக்காய் ஜீவனை கொடுத்தாரே, அன்பு
மானிடா, உந்தன் வாழ்க்கையில் என்றும்,
ஒவ்வொரு நொடியுமே தேவனின் அன்பு
-அன்பு அன்பு தேவனின் அன்பு