கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan
கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan
கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்
உயர்ந்த அடைக்கலமே
என் தேவாதி தேவன் என் இயேசு ராஜன்
உயர்ந்த அடைக்கலமே ஓ ஓ
எந்தன் கண்மலையே
சீனாய் மலையில் இறங்கிய தேவன்
செங்கடல் நடுவே நடத்திய தேவன்
இன்றும் என்னோடிருப்பதினாலே
கலக்கம் எனக்கில்லையே
உந்தன் வசனம் எனக்கு வெளிச்சம்
உந்தன் கரமே என்னை நடத்தும்
உந்தன் கிருபை என்னை தாங்கும்
உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன் – நான்
உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன்
கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்
மாராவின் நீரை மதுரமாய் மாற்றி
தாகம் தீர்த்திட்ட சர்வ வல்ல தேவன்
இன்றும் என்னோடிருப்பதினாலே
குறைவு எனக்கில்லையே
உந்தன் வார்த்தை எந்தன் ஜீவன்
உந்தன் நாமம் எந்தன் பெலனே
உந்தன் தயவே எந்தன் நிறைவு
உம் அன்பில் நிலைத்திருப்பேன் – நான்
உம் அன்பில் நிலைத்திருப்பேன்
கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்