கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil
கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்
எக்கால சத்தம் போல சத்தம் ஒன்றை கேட்டேன் – 2
ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே – 2
பிரதான ஆசாரியனை கண்டேன்
அவரே அல்பா அவரே ஒமேகா
முந்தினவரும் பிந்தினவருமானவர் – 2
அவர் ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2
எபேசுவே
உன் கிரியை, உன் பிரயாசம், உன் பொறுமை,
நீ பொல்லாதவரைச் சகிக்கக்கூடாத் தன்மை
அப்போஸ்தலரல்லாதவர் தன்னை பொய்யரென்று கண்டறிந்த உண்மை
நீ சகித்துக்கொண்டிருப்பதையும், பொறுமையாயிருப்பதையும்,
இளைப்படையாமல் என் நாமத்தினிமித்தம்
பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
என்று ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2
நீ ஆதியிலே கொண்ட அன்பை விட்டாய்
என்ற குறை உன்பேரில் உண்டு.
நீ எங்கிருந்து விழுந்தாயென நினைத்து,
மனந்திரும்பி, ஆதி கிரியை செய்வாய்
நீ மனந்திரும்பாவிட்டால் நான் சீக்கிரமாய்; வந்து,
உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன் நீக்கிவிடுவேன்
என்று ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2
நான் வெறுக்கும் நிக்கொலாய் மதஸ்தின்
கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்,
ஆவியவர் சபைகளுக்குச் சொல்லுவதை
காதுள்ளவன் கேட்டுக்கொள்ளக்கடவன்
ஜெயங்கொள்ளுபவனுக்கு பரதீசின் மத்தியிலிருக்கும்
ஜீவவிருட்சத்தின் கனியைக்கொடுப்பேன் புசிக்கக்கொடுப்பேன்
என்று ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2
Kartharudaiya nalil song lyrics in english