கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum
கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum
கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியே
காணவே அன்பால் உன்னை தேடி வாராரே (2)
1.பூத்து மலரும் பூவல்ல
பூவையர் விரும்பும் பூவல்ல (2)
மாந்தர் விரும்பும் பூவல்ல
மகிமை இயேசு விரும்பும் அன்பு
2.ஜாதி விலகிடும் தோஷமல்ல
அது சாத்தானால் வரும் தோஷமல்ல (2)
மக்களால் உண்டாகும் தோஷமல்ல
அது மகிபன் விரும்பும் சந்தோஷம்
3.சாத்திரம் காட்டும் தானமல்ல
அது சத்திரம் கட்டிடும் தானமல்ல (2)
மாந்தர்கள் செய்திடும் தானமல்ல
நம் மகிபர் விரும்பும் சமாதானம்
4.புத்தகம் எழுதும் மையல்ல
பூவையர் தீட்டிடும் மையல்ல (2)
மாந்தரை மயக்கும் மையல்ல
மா கோபத்தில் காட்டிடும் பொறுமை
5.இத்தரையோர் காட்டும் இரக்கமல்ல
ஏழைக்கு இரங்கும் இரக்கமல்ல (2)
பெருமையில் காட்டும் இரக்கமல்ல
நம் பிரியர் விரும்பும் தயவு
6.நாவலர் பழக்கும் குணமல்ல
நல்லோராய் நடக்கும் குணமல்ல (2)
சன்மார்க்கம் என்ற குணமல்ல
சத்தியத்தில் நிற்கும் நற்குணம்
7.பூக்களில் உண்டாகும் வாசமல்ல
புது சேர்க்கையில் உண்டாகும் வாசமல்ல (2)
பன்னீரால் உண்டாகும் வாசமல்ல
பரன் இயேசுவில் வைக்கும் விசுவாசம்
8.சாவில் விளங்கும் சாந்தமல்ல
சத்தத்தை அடக்கும் சாந்தமல்ல
சாந்த சொரூபி இயேசு நுகத்தில்
சாய்ந்து சுமக்கும் சாந்தம்
9.அமர்ந்திருப்பதடக்கமல்ல
அலகை வெறுப்படதடக்கமல்ல (2)
உலக இச்சைக்கு ஓடி விலகி
உன்னதரை சேரும் இச்சை அடக்கம்
10.ஏமாற்றம் என்ற இலைகளோடு
இயேசு தேடும் கனி இல்லை
அந்தோ சாபம் இறங்குது
அத்தி மரம் பட்டு போகுது
Kaniyae Karthar Virumbum song lyrics in english
Kaniyae Karthar Virumbum Madhura Kaniyae
Kaanavae Anbaal Unnai Thedi Vararae
1.Poothu Malarum Poovalla
Poovaiyar Virumbum Poovalla Maanthar Virumbum Poovalla
Mahiban Yesu Virumbum Anbu
2.Jaathi Vilakidum Thoshamalla
Athu Saathanaal Varum Thoshamalla
Makkalaal Undaakum Thoshamalla
Athu Mahiban Virumbum Santhosham
3.Saathiram Kaatum Thaanamalla
Athu Sathiram Kattidum Thaanamalla
Maanthargal Seithidum Thaanamalla
Nam Mahiban Virumbum Samathanam
4.Puthagam Eluthum Maiyalla
Poovaiyar Theetidum Maiyalla
Maantharai Mayakkum Maiyalla
Maa Kobathil Kaatidum Porumai
5.Itharaiyor Kaatum Erakkamalla
Yelaiku Irankum Irakkamalla
Porumaiyil Kaatum Irakkamalla
Nam Piriyar Virumbum Dayavu
6.Naavalar Palakkum Gunamalla
Nallorai Nadakkum Gunamalla
Sanmaarkkam Endra Gunamalla
Sathiyathil Nirkum Narkunam
7.Pookalil Undaagum Vaasamalla
Puthu Serkkaiyil Undaagum Vaasamalla
Paneeral Undaagum Vaasamalla
Param Yesuvil Veikkum Visuvasam
8.Saavil Vilangum Saanthamalla
Sathathai Adakkum Saanthamalla
Saantha Sorubi Yesu Nugathil
Saainthu Sumakkum Saantham
9.Amarnthiruppathu Adakkamalla
Alagai Veruppa Thadakkamalla
Ulaga Ichaikku Oodi Vilaghi
Unnatharai Serum Ichaiadakkam
10.Ematram Endra Elaigalodu
Yesu Thedum Kani Illai
Antho Saabam Iranghuthu
Athimaram Pattu Poghuthu
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்