Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே

Deal Score0
Deal Score0

Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே

கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே – உந்தன்
காலடித் தடங்கள் தானே காண்கிறேன்
தொடரும் எந்தன் பயணத்திலே இயேசுவே- உந்தன்
துணையை நாளும் நம்பித் தானே போகிறேன்

கோரஸ்:
வரலாறும் வாழ்வும் உனது இயேசுவே – உம்மை
வாழ்த்தி நன்றி கூறுவேன் என் தேவனே – தினம்
போற்றி உம்மைப் புகழ்ந்திடுவேன் இயேசுவே

2.⁠ ⁠உனது அன்பின் தூதராய் நீ அனுப்பிய- அன்பு
உள்ளங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்
அவர்களுக்கு ஏற்ற நன்றி கூறவே – இன்று
ஏழை நானும் என்ன செய்யப் போகிறேன்?

3.⁠ ⁠செய்த யாவும் உனக்குப் பாதக் காணிக்கை – அதை
சாதனைகள் என்பதெல்லாம் வேடிக்கை
உனக்கும் எனக்கும் தெரிந்த ஒரு ரகசியம்- என்
வாழ்க்கையே உன் அன்பு செய்த அதிசயம்- Kadandhu Vandha

Jeba
      Tamil Christians songs book
      Logo