Kayangal Aarave ummidam song lyrics – காயங்கள் ஆறவே உம்மிடம்

(பல்லவி)
காயங்கள் ஆறவே உம்மிடம் சேரவே வழிகள் கேட்கிறேன்
எந்தன் வழியை நீரே சொல்லும் நான் அதில் செல்கிறேன்
நான் வாழ்வது உம்மால் தான் உம்மை சார்ந்து தான் வாழ்ந்திடுவேன்
நான் பச்சிளம் குழந்தை தான் கைகள் விட்டால் விழுந்திடுவேன்

( சரணம் 1 )
சித்தத்தின் படி நான் வாழ்ந்தால் ராஜ்ஜியம் கதவு திறந்து விடும்
உலகத்தின் வாழ்க்கையை வாழ்ந்தால் எந்தன் ஆத்துமா அழிந்து விடும்
தகப்பனே உந்தன் கைகளை பிடிப்பேன் என்றும் விடமாட்டேன்
வாழ்க்கையில் கால்கள் தடுக்கி நானும் கீழே விழமாட்டேன்
நான் கீழே விழமாட்டேன்…
( சரணம் 2 )
உலகத்தின் இச்சையில் மயங்கி வாழ்க்கையில் கீழே விழுந்திருந்தேன்
கனிகள் கொடுக்கும் மரமாய் வாழ உண்மையே நாடி வந்தேன்
நமக்காய் சிலுவை சுமந்தார் தேவன் பாவத்தில் செல்வேனோ
சிலுவையில் கூட நினைத்தார் நம்மை என்றும் மறவேனோ
நான் என்றும் மறவேனோ…
(பல்லவி)
காயங்கள் ஆறவே உம்மிடம் சேரவே வழிகள் கேட்கிறேன்
எந்தன் வழியை நீரே சொல்லும் நான் அதில் செல்கிறேன்
நான் வாழ்வது உம்மால் தான் உம்மை சார்ந்து தான் வாழ்ந்திடுவேன்
நான் பச்சிளம் குழந்தை தான் கைகள் விட்டால் விழுந்திடுவேன்
காயங்கள் ஆறவே உம்மிடம் சேரவே வழிகள் கேட்கிறேன்
எந்தன் வழியை நீரே சொல்லும் நான் அதில் செல்கிறேன்
Kaayangal Aaravae Ummidam Searavae song