Irudhayam song lyrics – Aayathamaa Kavithaigal
Irudhayam song lyrics – Aayathamaa Kavithaigal
The human heart is one of the most
important organs in the body
it consists of the upper left and right atria
the lower left and right ventricles the
primary function of the heart
பயோலஜி சரி தியாலஜிய சொல்லுங்க தியாலஜியா
இதயத்துல என்ன இருக்குன்னு எல்லாருக்கும்
தெரியும் ஆனா அதுக்குள்ள உள்ள அடியில
ஆழத்துல என்ன இருக்குன்னு சொல்லுங்க
பாதாளத்தையும் அழிவையுமே ஆண்டவருக்கு
நல்லா தெரியுமே உன் இதயத்தை தெரியாதா
வெள்ளியை குகையும் பொன்னை உடம்பும்
சோதிக்கும் இருதயங்களை சோதிக்கிறவரோ
கர்த்தர் மனுஷன் பார்க்கிறது வெளிய
ஆண்டவர் பார்க்கிறது உள்ள எல்லாருக்கும்
இதயம் இருக்கு ஆனா மகா கேடு மகா திருக்கு
அதாங்க டிசீட் ஃபுல் டெஸ்பரேட்லி சிக்கு
இதை தெரியாதவன் சரியான
மக்கு இரண்டாம் அதிகாரத்துல தான்
படைச்சாரு திருட்டு பயலுவ ஆறாம்
அதிகாரத்துல கெட்ட பேர் வாங்கிட்டானுவே
அவன் இருதயத்தின் தோற்றமெல்லாம் நித்தமும்
பொல்லாததே என்று கர்த்தர் கண்டு
அட மண்டு நாலே அதிகாரத்துல நாறிப்போச்சு உன் மனசை
கெடுத்துப்புட்ட அவர் மனச உடைச்சுப்புட்ட
வளர்ந்த பிறகு கெட்டுப்போகல நீ
பொறந்தப்பவே கெட்டு போயிட்ட பார்வோன்
இதயம் மட்டும் கடினமாகல பார் உன் இதயம்
கூட கடினமால இருக்கு பழைய ஏற்பாட்டு
காலத்திலேயே சொல்லிட்டாரு என்னை முழு
மனசோட நேசின்னு இப்ப புதிய ஏற்பாட்டு
காலமே முடிய போகுது நீ இன்னும் அரை மனசோடதான்
ஆலயத்துக்கே போற விபச்சாரம்
வேசித்தனம் கொலை பாதகம் திருட்டு பொருளாசை
கபடு சாதகம் துஷ்டத்தனம் தூஷணம் காம
விகாரம் பெருமை மதிகேடு ஆக மொத்தம்
விவகாரம் இதெல்லாம் நம்ம மனசுல இருந்து
தான் வருது இதுதான் ஆண்டவருக்கு வேதனையை
தருது இப்ப என்ன பண்றது …ம்
ஆண்டவர் கிட்ட உங்க இருதயத்தை
கொடுத்துருங்க சுத்தம் பண்ணி குடுங்கன்னு
காலடியிலே படுத்துருங்க வேற லெவல் பீஸ்
வென் ஜீசஸ் ஃபில்ஸ் தட் பிளேஸ் உங்க முழு
இதயத்தோட ஆண்டவரை தேடுங்க அப்பதான் அவரோட
பிரசென்ஸ் பாதி உலகம் பாதி ஆண்டவர்னா
யூ வில் ஹவ் டு லேர்ன் சம் ஹார்ட் லெசன்ஸ்
சம்டைம்ஸ் வனாந்தரத்துல ஆலைய விடுவாரு
உங்க இதயத்துல என்ன இருக்குன்னு
தெரிஞ்சுக்க சம்டைம்ஸ் தூர தேசத்துல தொலைய
விடுவாரு நீங்க மனம் திரும்பி
வருவீங்களான்னு அறிஞ்சுக்க திருப்தியா
சாப்பிட்டு வீடு கட்டி சொத்து சேர்த்தா
மனசுல பெருமை வந்துரும் மனமேட்டிமே
அழிவை தந்துரும் சோ டோன்ட் ஃபார்கெட் தி லார்ட்
இன் யுவர் luxury in a moment you can turn it into when you
வெளிப்புற சடங்க ஆண்டவர் எதிர்பார்க்கல
எதையாவது ஒப்பிக்கிறதை பக்தியில சேர்க்கல
இதய விருத்த சேதனம் தான் கரெக்ட் உங்க
இதயத்தோட ஆராதிச்சாதான்
கனெக்ட் மனசை சுத்தமா வச்சு என்ன யூஸ்
அப்படின்னு கேட்காத கெட்டவன் ஜாலியா
இருக்கும்போது பொறாமையா பார்க்காத
அவனுக்கு கொஞ்ச நாள்ல அயர்வு உன் நல்ல
மனசுக்கு நிரந்தரமா உயர்வு இதயம்
ஸ்ட்ராங்கா இருக்கணும்னா கர்த்தரை நம்பு
மனுஷனை நம்புனா உனக்கு தான் வம்பு
இருக்கிற எல்லாத்தையும் அழிச்சிட்டு
வரவேண்டாம் இருதயத்தை கிழிச்சிட்டு வந்தாபோதும்
ஆண்டவருக்கு பிடிக்காத இதயம் என்ன
தெரியுமா அக்கிரம இதயம் வக்கிரம இதயம்
பெருமைப்படுற இதயம் பொறாமைப்படுற இதயம்
பொருளாசை இதயம் பெருந்தீன இதயம் குடிவெறி
இதயம் கடினமான இதயம் உலகத்தா இதயம்
உருபடாத இதயம் மாறுபாடான இதயம்
மாறிக்கிட்டே இருக்கிற
இதயம் மனசை எப்படி பாதுகாக்கணும் தெரியுமா
கிருபையும் சத்தியமும் மனசுக்குள்ள
சேர்த்துக்கும் கர்த்தர் உடைய வசனத்தை
மனசார ஏத்துக்கோ இதயத்தை புத்திமதிக்கு
சாய்ச்சிக்கோ கெட்டவங்க கிட்ட உன் மனசு
போகாம பார்த்துக்கோ பொக்கிஷம் எங்கேயோ
அங்கதான் உன் மனசு அதனால மேல சேர்த்து வை
மேல மேல சேர்த்து வைக்காத ஒரு நல்ல மனசோட
ஆசீர்வாதம் என்ன தெரியுமா இருதயத்தில்
சுத்தம் இருந்தா பாக்கியம் நேர்மையான மனசு
இருந்தா கர்த்தர் கிட்ட ஸ்லாக்கியம்
விசுவாசிங்க எல்லாரும் ஒரே மனசோட
இருக்கணுங்கிறதுதான் பாக்கியம் அப்பதான்
உண்மையான ஐக்கியம்
ஜெபம் பண்ணலாமா
ஆண்டவரே ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்
சுத்த இருதயத்தை என்னை சிருஷ்டியும்
என் இதயத்தை புடமிட்டு பாரும்
என் இதயத்தை ஒருமுக படுத்தும்
ஞானமுள்ள இதயம் தாரும்
எங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்தும்
கல்லான இதயத்தை எடுத்துப்போட்டு
அந்த நல்லயான் இதயத்தை
தாரும் இயேசுவின் நாமத்தில்
பிதாவே ஆமென்
Irudhayam song lyrics Aayathamaa Kavithaigal by Ravi Bharath