En Kanmalai Neerae – என் கன்மலை நீரே

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே

என் கன்மலை நீரே
உம் கண்ணின்மணி
நானே காத்திடுவீரே
என்றென்றும் நீரே – 2

கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே கோணல்களை
செவ்வையாக மாற்றுபவர் நீரே – 2
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி
துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே

நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்
பதில் கொடுப்பீர் – 2
நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர்
உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர் – 2 – ஆடிடுவேன்

புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து
உம் பிள்ளையாக்கினீரே – 2 – ஆடிடுவேன்

 

We will be happy to hear your thoughts

      Leave a reply