Azhagiya nallithu Aanantha Nallithu song lyrics – அழகிய நாளிது ஆனந்த நாளிது
Azhagiya nallithu Aanantha Nallithu song lyrics – அழகிய நாளிது ஆனந்த நாளிது
அழகிய நாளிது ஆனந்த நாளிது இனிமை தரும் நாளிது
இறைவன் நம்மை அழைக்கின்றார்
அருளை நம்மில் பொழிந்திடவே
எழுவோம் இணைவோம் புதிய வாழ்வினை தொடர்ந்திடுவோம்
1.அன்பிலே நம்மை அரவணைப்பார் வாருங்கள்
அருளிலே நம்மை நனைத்திடுவார் கூடுங்கள்
இறை அன்பு குறையாதது பிறரன்பு மேலானது
அவர் வழியிலே நாம் வாழுவோம்
அவர் பலியிலே நாம் பகிருவோம்
புதிய வாழ்வினை தொடர்ந்திடுவோம்
2.பணிவுடன் பணி செய்ய அழைக்கின்றார் வாருங்கள்
பரிவுடன் பகிர்ந்திட அழைக்கின்றார் கூடுங்கள்
இறைவார்த்தை உணவானது இறையாட்சி நடந்தேறுது
புதுப் பாதைகள் நாம் தேடுவோம்
பிறர் வாழ்வினை நாம் பேணுவோம்
புதிய வாழ்வினை தொடர்ந்திடுவோம்
அழகிய நாளிது sung by Fr.Victor Azhagiya nallithu வருகைப் பாடல்