Alla alla kuraiyathathu song lyrics – அள்ள அள்ள குறையாதது
Alla alla kuraiyathathu song lyrics – அள்ள அள்ள குறையாதது
அள்ள அள்ள குறையாதது
சொல்ல சொல்ல முடியாதது
இயேசுவின் அன்பு – அன்பு
1 மானிட வடிவில் வந்த அன்பு
பாவியை நேசிக்கும் தூய அன்பு
2 சிலுவையில் தன்னை தந்த அன்பு
சிந்திய ரத்தத்தாலே மீட்கும் அன்பு
3 நாள்தோறும் நன்மைகள் செய்திடும் அன்பு
நேற்று இன்றும் என்றும் மாறிடா அன்பு
4 நீளம் அகலம் இல்லா அன்பு
நீசனாம் என்னையும் நேசித்த அன்பு
5 குஷ்டரோகியை சுகமாக்கும் அன்பு
கஷ்டப்படுவோர்க்கு உதவிடும் அன்பு
6 கண்ணீரை துடைக்கும் கனிவான அன்பு
கவலைகள் நீக்கிடும் கருணையின் அன்பு