உள்ளமெல்லாம் உருகுதையோ – Ullamellam Uruguthaiya song lyrics

Deal Score+3
Deal Score+3

உள்ளமெல்லாம் உருகுதையோ – Ullamellam Uruguthaiya song lyrics

1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics

தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
These are the generations of the heavens and of the earth when they were created, in the day that the LORD God made the earth and the heavens,
ஆதியாகமம் | Genesis: 2: 4

https://www.instagram.com/p/BQnu0MMAW4N/

TamilChristians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo