Yesuvae Un Vaarthaiyae En Aaruthal song lyrics – இயேசுவே உன் வார்த்தையே

Deal Score0
Deal Score0

Yesuvae Un Vaarthaiyae En Aaruthal song lyrics – இயேசுவே உன் வார்த்தையே

இயேசுவே உன் வார்த்தையே என் ஆறுதல்

தாயின் கருவில் இருந்தபோது உருவாய் உலகில் பிறந்தபோது
இருளில் நானும் தவித்தபோது ஒளியைக்காண துடித்தபோது
உறவைநாடி உருகும்போது அருளைத்தேடி அலைந்தபோது

அமைதி இழந்து சோர்ந்;தபோது அகமே நெருப்பாய் எரிந்தபோது
உலகம் என்னை வெறுத்தபோது அன்பை ஏங்கி வாழ்ந்தபோது
நோய்கள் என்னைத் தொடர்ந்தபோது துன்பக் கடலில் துவழ்ந்தபோது

கசப்பு வாழ்வில் கரைந்தபோது கால்கள் இடறி வீழ்ந்தபோது
வெறுமை என்னில் உறைந்தபோது வறுமை என்னை வாட்டும்போது
பணியில் நானும் தளரும்போது பலரும் எள்ளி நகைத்தபோது

நிசமே நிழலாய் மறைந்தபோது பொய்மை நிசமாய் மாறும்போது
சாபம் என்னில் படர்ந்தபோது நம்பிக்கை என்னில் நலிந்தபோது
உயிரின் பிரிவை எண்ணும்போது உலகைப் பிரிய நினைக்கும்போது
உயிரும் உறவும் அகலும்போது உடலும் மண்ணில் சாயும்போது

இறைவார்த்தை பஜன்

    Jeba
        Tamil Christians songs book
        Logo