Suthanthiram Engal urimai Athai Independence day song lyrics – சுதந்திரம் எங்கள் உரிமை

Deal Score0
Deal Score0

Suthanthiram Engal urimai Athai Independence day song lyrics – சுதந்திரம் எங்கள் உரிமை

சுதந்திரம் எங்கள் உரிமை அதை
காப்பது எங்கள் கடமை
சமத்துவம் எங்கள் கொள்கை
அது சரிநிகர் எங்கள் உரிமை

இரத்தம் சிந்திய தியாகிகளை
நாம் நித்தமும் நினைத்து போற்றிடுவோம்
மனித மாண்பு மதிக்கப் பெற்று
உறவு பாலங்கள் அமைத்திடுவோம்
சத்தம் இன்றி யுத்தம் இன்றி
ஜாதி வெறியினை ஒழித்திடுவோம்

எண்ணும் எழுத்தும் கண் என்போம்
அதை என்றும் எங்கள் உயிர் என்போம்
மனங்கள் ஒன்றாய் இணைந்து நாங்கள்
செயல்கள் யாவையும் செய்திடுவோம்
அன்பும் பண்பும் அறநெறி செயல்கள்
அனைத்தும் எங்கள் குணம் என்போம்

    Jeba
        Tamil Christians songs book
        Logo