Ennaalum Enai Kakkum En Deivamae song lyrics – எந்நாளும் எனைக் காக்கும்
Ennaalum Enai Kakkum En Deivamae song lyrics – எந்நாளும் எனைக் காக்கும்
எந்நாளும் எனைக் காக்கும் என் தெய்வமே
என்னுள்ளே வர வேண்டும் இந்நேரமே
உன் சொல்லில் நலம் வாழ உளம் நாடுதே
உன் அன்பில் தினம் வாழ மனம் தேடுதே
கண்மணிபோல எனைக் காக்கும் உன் அன்பையே
கண்கூடாகக் காட்டும் அற்புத ஆதாரமே
உணவாகி உயிர்க் கொடுக்கும் என் தெய்வமே
மருந்தாகி துயர் போக்க வர வேண்டுமே
திருவுடல் திணம் உண்டால் அதுபோதுமே
எனதுயிர் உன் அன்புப் பதம் சேருமே
நிறைவாழ்வு தரும் உந்தன் கருணை இது
நிலைவாழ்வில் சேர்க்கும் நற்கருணை இது
கண்மணிபோல எனைக் காக்கும் உன் அன்பையே
கண்கூடாகக் காட்டும் அற்புத ஆதாரமே
பகை கோபம் பழி பாவம் என் வாழ்க்கையில்
பல நூறு பேதங்கள் என் பார்வையில்
நன்றாக வாழ்வோர்க்கே இது நன்மையே
ஒன்றாக வாழ்ந்தால் தான் இது உண்மையே
இறைவா நீர் எமைச் சேரும் ஒன்றாகவே
தினம் வாழ்வோம் உம் அன்பில் நன்றாகவே
Ennalum Enai Kakkkum Tamil Communion Song