Yesuvai Kaana Iraiyanbil Magila song lyrics – இயேசுவைக் காண இறையன்பில்

Deal Score0
Deal Score0

Yesuvai Kaana Iraiyanbil Magila song lyrics – இயேசுவைக் காண இறையன்பில்

இயேசுவைக் காண இறையன்பில் மகிழ
ஆலயம் வாருங்கள்
அவர் பார்வைக் கொண்டு பயணம் செல்ல
விரைந்தே வாருங்கள்

பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
இன்றே வாருங்கள்
தாகம்கொண்டு தவித்திருப்போரே
அவரைக் காணுங்கள்
வாருங்கள் வாருங்கள் நம்பி வாருங்கள்
இயேசு அழைக்கின்றார்
அருள்வாழ்வு வாழ்ந்து நிறைவாழ்வு காணவே
இயேசு அழைக்கின்றார்

உரிமைகள் இழந்து ஒடுக்கப்பட்டோரே
இயேசுவைத் தேடுங்கள்
உறவுகள் பிரிந்து தனித்திருப்போரே
அவரை நாடுங்கள்
வாருங்கள் வாருங்கள் இணைந்து வாருங்கள்
இயேசு அழைக்கின்றார்
புதுவானம் காண புதுபூமி படைக்கவே
இயேசு அழைக்கின்றார்

Yesuvai Kaana Entrance Hymn Tamil

Jeba
      Tamil Christians songs book
      Logo