Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன்

Deal Score0
Deal Score0

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன்

கண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா.?
உன் கஷ்டம் பாராமல் தேவன்
இருக்கிறாரா?

கலங்காதே, பயப்படாதே,
திகையாதே

உன்னை பார்த்து பார்த்து படைத்த
தேவன் அவர்தானே
உன்னை தனியாக விட்டு அவர் போவாரோ (2)

1.பயணற்ற எதையுமே தேவன்
படைக்க மாட்டாரே
உன்னை அவர் படைத்தார், நீ விலையேற பெற்றவன்
(வேலையேற பெற்றவள் )

அவரே நம்மை உண்டாகினார்,
அவரின் ஜனமாய் மாறி விட்டோமே

உன்னை படைத்தாரே உன்னை நியமித்தாரே
சித்த திட்டங்கள் வைத்தார்
அவர் உள்ளங்கைகளில்
உன்னை வரைந்தாரே
பல கனவுகள் வைத்தார்

2.வாழ்க்கையே வீண் என்று மனம் தளர்ந்து போனாயோ?
உன்னை அவர் படைத்தார் நீ விலையேற பெற்றவன்

மனிதர்களாலே நீ உடைந்து போனாயோ?
நெருக்கத்தினாலே நீ உடைந்து நிற்கிறாயோ?
வாழ்வின் அர்த்தத்தை நீ இழந்து நிற்கிறாயோ?

அவரே உன்னை உண்டாக்கினார்
அவரின் ஜனமாய் மாறி விட்டாயே

உன்னை கண்டார், இயேசு உன்னை கண்டார்
உன் நிலமைகளை அவர் அறிவாரே

Jeba
      Tamil Christians songs book
      Logo