Nantri sollum naalithuvae pongal song lyrics – நன்றி சொல்லும் நாளிதுவே

Deal Score0
Deal Score0

Nantri sollum naalithuvae pongal song lyrics – நன்றி சொல்லும் நாளிதுவே

பல்லவி

நன்றி சொல்லும் நாளிதுவே
ஒன்று கூடுவோம் – நம்
நலம் காண நாடு வாழ
பொங்கல் பொங்குவோம்
சாதி மத பேதமெல்லாம் போஹியாக்குவோம்
சம நீதி வாழ நாமும் கூடிப் பொங்குவோம்

பொங்கனும் பொங்கனும்
பொங்கல் இங்கே பொங்கனும்
தங்கனும் தங்கனும்
தமிழ் போலத் தங்கனும்

சரணம் – 1
உழவைக் கொண்டாடும் திருநாளிது
உழைப்பை வணங்கும் பெருநாளிது
தேவனுக்கு நன்றி சொல்லும் அருள் நாளிது
யாவரும் கேளிராகும் நன்னாளிது

தமிழனாய் தலை நிமிரும் நாளிது
தரணியில் புகழ் நிலைக்கும் வாழ்விது

ஏழ்மை மறையனும்
தாழ்மை அழியனும்
ஏற்றத்தாழ்வு
இல்லையாகனும்
எல்லோருக்குமான
உலகம் ஆகனும்

நீதி செழிக்கனும் நேசம் சுரக்கனும்
மனிதம் இங்கே காத்து மகிழனும்
மானுடம் போற்றும்
பொங்கல் இங்கே பொங்கனும்

சரணம் – 2

ஆதவனின் ஆட்சியில் இயற்கை செழிக்குது
ஆண்டவனின் ஆசியில் இதயம் சிலிர்க்குது
படைப்புக்கு நன்றி சொல்லிப் பண்கள் பாடுவோம் இறைவனை ஏற்றி பொங்கல் பொங்குவோம்

உறவுகள் வளர நல்ல பகிர்வம்மா – நம்
உயர்வுக்கு வழி தமிழ் தையம்மா

வீடு சிறக்கனும் நாடு ஒளிரனும்
ஊரு உலகம் செழித்து வளரனும்
உன்னதனின் ஆட்சி இங்கு நிலைக்கனும்
இயற்கை சிரிக்கனும் இதயம் விரியனும்
கரும்பாய் இனிக்கும் வார்த்தை பேசனும்
கடவுளின் பிள்ளைகளாய் வாழனும்

வாழனும் வாழனும்
எல்லோருமாய் வாழனும்
பொங்கனும் பொங்கனும்
சமத்துவமாய் பொங்கனும்

Jeba
      Tamil Christians songs book
      Logo