அழைத்தாயே உனக்காக இறைவா- Azhaithaye unakaga iraiva
அழைத்தாயே உனக்காக இறைவா- Azhaithaye unakaga iraiva
அழைத்தாயே உனக்காக இறைவா – உந்தன்
பணிக்காக அழைத்தாயே தலைவா
பணித்தாயே உன்அன்பை நான் கொடுக்க – வரம்
கொடுத்தாயே பணிவாழ்வில் நான் நிலைக்க
கோரஸ்: எந்நன்றி சொல்வேன் என் இறைவா
என்றென்றும் நன்றி என் தலைவா
என்மீது ஏன் அன்பு நீ காட்டினாய்? – இந்த
ஏழைஎன் இதயத்தில் தீ மூட்டினாய்?
எனக்காக நான்வாழ்ந்த காலத்திலே – என்னை
வாவென்று ஏன்சொல்லி கரம் நீட்டினாய்?
பலவீனன் எனைவிட்டு அகலும் என்றேன் – என்
பயம்நீக்கி கைசேர்த்து அழைத்துச் சென்றாய்
உன் அன்பை உணர்ந்திட்டேன் நான் மாறினேன் – உன்
அருளாலே உன்சீடன் நான் ஆகினேன்
ஊரெல்லாம் உன்தீபம் நான் ஏற்றினேன் – உன்
பெயர்சொல்லி பல்வேறு பணியாற்றினேன்
பல்லாண்டு கடந்தாலும் பணியாளனாய் – நான்
பயணிக்கும் பேற்றுக்காய் கரம் கூப்பினேன்.
Azhaithaye unakaga iraiva song lyrics in english
Azhaithaye unakaga iraiva – Unthan
panikkaga Azhaithaye Thalaiva
Panithayae un anbai naan kodukka varam
koduthayae panivaalvil naan nilakka
Ennandri solvean en iraiva
entrentrum nandri en thalaiva
En Meethu yean anbu nee kaattinaai- Intha
yealai en idhyaththil thee moottinaai
enakkaga naan vaalntha kaalathilae ennai
vaventru yean solli karam neettinaai
Balaveenan enaivittu agalum entrean en
bayam neekki kaisearthu alaithu sentraai
un annai unarnthittean Naan maarinean – un
Arulalae un sedan naan aaginean
Oorellam un deepam naan yeattrinean -un
peayar solli palveru paniyattrinean
pallandu kadanthalum paniyalanaai -naan
payanikkum peattrukaai karam kooppinean
Tamil Irai Azhaippu Padal