ஆனந்த புகலிடமே எந்தன் – Aanantha pugalidamae Enthan song lyrics 

Deal Score0
Deal Score0

ஆனந்த புகலிடமே எந்தன் – Aanantha pugalidamae Enthan song lyrics

பல்லவி

ஆனந்த புகலிடமே எந்தன் இயேசையனின் காயங்கள்
உன்னத அடைக்லம்

அனுபல்லவி

எங்கெங்கோ தேடினேன்
ஒதுக்கிடம் காணேன்
செங்குருதி சிந்திய இரட்சகனில் கண்டேன்

சரணம்

1.பாய்ந்திடும் வேங்கையிடம்
சிக்கிய மானைப்போல்
பாதக பவப்பொறியில்
சிக்கினேன் தப்புவித்தார்
உள்ளங்கைகளிலே வரைந்தார்
என்னைப் பொதிந்தார்
கருணைத் தோள்களிலே
சுமந்தார் அகமகிழ்ந்தார்

2.சீறிடும் புயலினிலே
தவித்திடும் பறவையைப் போல்
மீறிடும் பவப்பிழைகள்
சூழவே நிலைக்குலைந்தேன்
கண்ணீருடன் கதறி
பரமன் சரண் புகுந்தேன்
செந்நீர் கரங்கள் எனை
கழுவ மீட்படைந்தேன்

1.சா ரீ கா மா பா தா
சரிகமபா ரிகமப ச்நிதபம-ஆனந்த

2.பமகரி சரிகம பதபமபா
பதநீ தபம க்ரிச்நீதபம

3.பத பபபாத பத பபபாதா பத
பதநிச் நிதபம சரிகமபா
நிநிநீச் நீச் நிநீ நீச் நிச்
நிச்க்ரிச்நிதப மபதநிச்
ச்க்ரி… நிரீச் ….தநித ….பதப…
ச்க்ரி ..நிரீச்.. தநித ..பதப ..
ச்க்ரி நிரீச் தநித பதப பமகம
ஆனந்த

Aanantha pugalidamae Enthan song lyrics in english

Aanantha pugalidamae Enthan

Jeba
      Tamil Christians songs book
      Logo