யாரும் எனை அறியும் முன்னரே – Yaarum Enai Ariyum Munnarae
யாரும் எனை அறியும் முன்னரே, என்னை தெரிந்து கொண்டீர்,
உம்மை அறியும் முன்னரே, எனக்காய் ஜீவன் கொடுத்தீர் -(2)
கரம் கொடுத்து, கை பிடித்து, பிள்ளை போல நடக்க வைத்தீர்,
என கால்கள் வழுவாமல், எல்லை வரை காத்து வந்தீர் -(2)
நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே,
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் -(2)
1) மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ,
(நீர்) நம்பினீர், திரும்பி வருவேன் என்று -(2)
திரும்பி வந்த என்னை, நிரப்பினீர் உன் ஆவியால்,
மறுபடியும் தந்தீர், என் இழந்த வாழ்க்கையை -(2) …(நன்றி)
2) சிலுவையை சுமந்தீரே என் பாவம் போக்க,
குணமாக்கினீர் வாழ்வின் காயங்களை -(2)
முடிந்த என் வாழ்வை, விடியலாய் நீர் மாற்றினீர்,
நீர் தந்த வாழ்க்கையை, உமக்கே தருகிறேன் -(2) …(நன்றி)