பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil

Deal Score0
Deal Score0

பனி காலம் ஓர் நள்ளிரவில்
பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்
மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பெத்லகேம் அருகில் வயல்வெளி
மேய்ப்பர் காத்தனர் மந்தைகளை
அதன் கூறினான் நற்செய்தியை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

வானத்தில் ஓர் நட்சத்திரம்
கண்டனர் மூன்று சாஸ்திரிகள்
அறிந்தார் பேரோர் உண்மைதனை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

பாலகனின் பிறந்த நாள்
கேட்போம் அந்நற்செய்திதனை
திறப்போம் இதய கதவினை
பிறப்பார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா

 

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo