ராயரே புயல் வீசுதே – Raayarae Puyal Veesuthae
1.ராயரே! புயல் வீசுதே
கடல் அலை பொங்குதே
காரிருள் எங்கும் மூடிடுதே
புகல், கதி இல்லையே
மாள்கிறோமே, பாரீரோ நீர்
தூக்கம் கொண்டீர் ஏனோ?
ஒவ்வோர் வேளையும் கடல் பொங்கியே
விழுங்கப் பார்க்குதய்யோ!
காற்றே, கடலே, நீ அடங்குவாய் சாந்தமாய்
கொந்தளிக்கும் கடலாயினும்
பிசாசுகள், மனிதர் யாராயினும்
கடல், பூமி, வானராஜன் தங்கும்
படகை விழுங்காதே, ஆழியும்;
அனைத்தும் என் சித்தம், அடங்கும்,
அடங்கும், அடங்கும்;
அனைத்தும் என் சித்தம் அடங்கும் மா சாந்தமாய்.
2.ராயரே! சஞ்சலத்தாலே
நோகுதே என் மனமும்,
கலங்கும் என் இதயத்தை நீர்
உணர்த்தி ரட்சியுமே ;
பாவச் சஞ்சல வெள்ளமும்
ஆத்மா மேல் பாயுதே
நாங்கள் அமிழ்ந்து போகுமுன், நாதா!
உடனே நீர் அமர்த்தும்.
3.ராயரே! திகில் நீங்கிற்றே,
ஓலமும் அமர்ந்தது;
நீதியின் சூரியனும் தோன்றி,
இதயத்தில் வந்ததே ;
நில்லும் அருமை மீட்பரே,
தனியாய் விடாதீர்
உம்மில் பூரிப்பாய் அக்கரை சேர்ந்து
பாக்யனாய் வாழ்வேன் அங்கே.
Raayarae Puyal Veesuthae song lyrics in English
1.Raayarae Puyal Veesuthae
Kadal Alai Ponguthae
Kaarirul Engum Moodiduthae
Pugal Kathi Illaiyae
Maalkiromae Paariro Neer
Thookkam Kondeer Yeano
Ovvoar Vealaiyum Kadal Pongiyae
Vilunga Paarkkuthaiyo
Kaattrae Kadalae Nee Adanguvaai Saanthamaai
Konthalikkum Kadalayinum
Pisasugal Manithar Yaaraayinum
Kadal Boomi Vaana Raajan Thangum
Padagai Vilunkathae Aazhiyum
Anaithum En Siththam Adangum
Adangum Adangum
Anaithum En Siththam Adangum Maa Saanthaamai
2.Raayarae Sanjalathalae
Noguthae En ManamUM
Kalngum En Idhayaththai Neer
Unarththi Ratchiyumae
Paava Sanjala Vellamum
Aathma Mael Paayuthae
Naangal Amilnthu Pogumun Naatha
Udanae Neer Amarththum.
3.Raayarae Thigil Neenkittrae
Oolamum Amarnthathu
Neethiyin Sooriyanum Thontri
Idhayaththil Vanthathae
Nillum Arumai Meetparae
Thaniyaai Vidatheer
Ummil Poorippaai Akkarai Searnthu
Bakyanaai Vaalvean Angae.