மகிழ்ந்து கொண்டாடுவோம் – Magilnthu Kondaduvom Magibanin
Gm / Tempo 124
மகிழ்ந்து கொண்டாடுவோம் மகிபனின் தேசத்தில்
அகமகிழ்ந்திடுவோம் கர்த்தரின் சமூகத்தில்
மகிமையின்மேல் மகிமையடைத்து மறுரூபமாகுவோம் – 2
ஆனந்தம் பேரின்பம் நேசரின் சமூகத்தில்
ஆர்ப்பரிப்போம் நாம் ஆராதிப்போம் அன்பர் இயேசுவின் பாதத்தில் – 2
அடிமையாய் வாழ்ந்த வருஷங்கள் இனிமேல் நமக்குயில்லை
இதுவரை கண்ட எகிப்தியரை இனிமேல் காண்பதில்லை – 2
பாலும் தேனும் ஓடும் தேசம், பஞ்சம் அறியா பரம தேசம்
வாக்கு தத்த தேசம் , கர்த்தர் வாக்குரைத்த தேசம் .. மகிழ்ந்து
வாஞ்சிக்கும் தேசத்தை அடையும்வரை சோர்த்து போவதில்லை
நம் இலக்கை அடைந்திடும் காலமோ அதி தூரத்தில் நமக்கு இல்லை- 2
உயர்வு, தாழ்வு இல்லா தேசம், துன்பம் அறியா பரம தேசம்
வாக்கு தத்த தேசம் நங்கள் வாழப்போகும் தேசம் .. மகிழ்ந்து
குறுகிய கால இன்னல்கள் நமக்கு உரியதில்லை
சஞ்சலம், பசித்தாகம், வருத்தங்களும் அங்கே நமக்கு இல்லை – 2
மேகமீதில் கர்த்தர் வருவார், நம்மை அவருடன் அழைத்து செல்வார்
வாக்கு தத்த தேசம், அதுவே நம் சீயோன் தேசம் .. மகிழ்ந்து
வாக்குத்தத்த தேசம் | New Tamil Christian song | Kingsly Sivapragasam | Pastor.Joel Thomasraj