பொன்மாலைநேரம் பூந்தென்றல் – PONMAALAI NERAM song lyrics

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு என்னில் உறவாடும் நேரம்
என் துன்ப ராகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்

1
நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் – ( 2 )
காலம்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே
என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே
ஆஆஆ ம்ம்ம்
( பொன்மாலை )

2
ஒரு கணம் என் அருகினில் – நீ அமரும் போது ஒரு யுகம்
உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புது யுகம் – ( 2 )
முள்ளில் பூத்த ரோஜா என்னை அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகி;ழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லையில்லை
அன்பின் இறையே எந்தன் இதயம் உன்னன்பைப் பாடவே
ஆஆஆ ம்ம்ம்

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo