காத்தீரே என்னை கருவிலே – Kaatheerae Ennai Karuvilae

Deal Score0
Deal Score0

காத்தீரே என்னை கருவிலே – Kaatheerae Ennai Karuvilae

காத்தீரே என்னை கருவிலே
படைத்தீரே‌ உந்தன் உருவிலே
பெயர் சொல்லி அழைத்தீரே
உயிரோடு கலந்தீரே -2

உதிரத்தை சிந்தி என்னையும் மீட்டீர்
தகப்பன் என்று அழைக்கும் உரிமையும் தந்தீர் -2

Chorus :
உம் பிரசனத்தில் நான் தொலைகிறேன்
என்னை நானே மறக்கிறேன்
உம் அன்பை நானும் நினைக்கிறேன்
கண்ணிராலே நன்றி சொல்கிறேன் -2

1. Stanza
மனசினுள்ள காயங்கள்
உம் பிரசனத்தில் ஆறுதே
மனிதர்கள் செய்த துரோகங்கள்
உம் உண்மையால் மறக்குதே -2

வார்த்தையால் மனதை
உடைத்திடும் உலகம்
உடைந்ததை இணைக்கும் உம்
பிரசனம்மே போதும் -2

Chorus :
உம் பிரசனத்தில் நான் தொலைகிறேன்
என்னை நானே மறக்கிறேன்
உம் அன்பை நானும் நினைக்கிறேன்
உம்மில் நானும் இணைகிறேன்

2. Stanza
உம் பிரசனத்தில் பர்வதமும்
மெழுகுப் போல் உருகுதே
என் எதிரிகள் யாவரையும்
முழுமையாய் அழிக்குதே -2

மலைகளும் விலகும் பர்வதம் பெயரும்
உந்தனின் கிருபை என்றென்றும் நிற்கும்
பெலவீன நேரம் என் பெலனாய் திகழும்
உந்தனின் கிருபை ஒன்றே போதும்

Chorus :
உம் பிரசனத்தில் நான் தொலைகிறேன்
என்னை நானே மறக்கிறேன்
உம் கிருபையால் நான் நிற்கிறேன்
கண்ணிராலே நன்றி சொல்கிறேன் -2

NAAN THOLAIGIRAEN | New Tamil Christian Worship song

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo