என்னை தாங்கிடும் தெய்வம் – Ennai Thaangidum Theivam
என்னை தாங்கிடும் தெய்வம் நீங்கதான்
என்னை தப்புவிக்கும் தெய்வம் நீங்கதான் – (2)
கைய பிடிச்சு தோளில் ஏற்றி
என்னை சுமந்து என்னை நடத்தி
இந்த விதங்களை நான் மறந்து போவேனோ கைய பிடிச்சத நான்
விட்டு விடுவேனோ கைய பிடிச்சத நான்
விட்டு விடுவேனோ – (2)
1. கூடவே இருப்பேன் என்று சொன்னவங்க மறந்தாங்க
நீர் என்னை மறக்கவில்லையே
என்னை விட்டு விலகவில்லையே – (2) ( கைய பிடிச்சு)
2. என் மீது பாசம் வச்சு ஒவ்வொரு நாளும் நடத்துனீங்க
அதை நான் மறந்து போவேனோ மறந்தே உலகில் வாழ்வேனோ – (2) ( கைய பிடிச்சு)
3. எல்லாரும் மறந்ததாலே மனம்
உடைந்து அழுதேனே
அழாதே என்று சொன்னீரே
அருகினில் வந்து நின்றீரே – (2) ( கைய பிடிச்சு)